Thursday, November 28, 2013

Acne - Siddha Cures

 

Acne:

Although most often associated with teenage hormones, acne can strike at any age and can be caused by more than hormones. Poor nutrition can contribute to poor complexion, so stay away from sugary, fatty foods that can provide fuel for acne bacteria or contribute to skin inflammation. As the skin is a major detox organ, a buildup of toxins in the body can contribute to clogged pores and unsightly blemishes.


Foods to avoid:

While no across-the-board food prescription will cure acne, experts suggest steering clear of these specific foods and food categories in order to score glowing, blemish-free skin:

Refined grains. Because they are so highly processed, the majority of cereals, breads, and other flour-based foods that we love to eat lack the nutrients, namely zinc, and antioxidants our skin needs to combat acne.

Refined sugars. Candy, soda, pastries, and cookies can be particularly troublesome for those prone to acne. These indulgences spike blood sugar levels, which your body tries to bring down by producing more insulin and male hormones. In turn, these hormones prompt the sebaceous glands to work overtime, resulting in blocked pores and inflammation.


Dermatologists believe milk accelerates the body’s synthesis of androgens, male hormones present in both men and women, which causes the sebaceous glands to crank out excess sebum. You can avoid milk’s blemish-inducing effects without skimping on calcium by switching to eating plenty of butter milk and greens.

Vegetable oils. Corn, sunflower, safflower, and sesame oils have far more omega-6 fatty acids than anti-inflammatory omega-3s. This imbalance promotes inflammation, which causes skin cells to clump together and jam pores.


Five acne-zapping foods:


Now that you’ve figured out which foods to avoid, you may worry that you’ll face serious food deprivation. But rest assured there are plenty of delicious foods that also help fight acne, including:


1. Whole grains. When it comes to thwarting acne-causing inflammation, fiber-packed whole grains work like a charm. “Whole grains carry a lot of antioxidants,”. “They also stabilize blood sugar and prevent insulin spikes.” Siddha Physicians advises checking a product’s nutrition info to make sure it’s high in fiber and low in sugar. Even better to forget wheat and give ancient grains like Ragi, Kambu, Thinai and Saamai a try.

2. Fish. Heralded as the premiere source of omega-3 fatty acids, cold-water, oily fish are loaded with anti-inflammatory eicosapentaenoic acid (EPA) and docosahexaenoic acid (DHA).

3. Green vegetables. Packed with inflammation-fighting nutrients and loads of antioxidants, most green leafy veggies contain plenty of fiber, which helps slow the rise of blood sugar after eating. Root tubers had to be restricted ( except Karunai)

4. Purple and deep red foods. According to The Clear Skin Diet, foods containing anthocyanins are high in antioxidants and help maintain blood flow to the skin, promoting optimum cell turnover (essential for keeping pores clear). Acai, pomegranates, purple carrots, black grapes, and beets are all great choices.


5. Green tea. Among its numerous health benefits, green tea also helps keep pimples from popping up. It’s chock-full of the antioxidant catechin EGCG, an effective anti-inflammatory. But beware of bottled green tea drinks, which often contain scads of added sugar and calories.



Treatments in Siddha system:


Oil Bath:
Based on the Naadi and Body constituent oil bath has to be taken twice weekly with Medicated oil. it will balances the Pitha Daathu, prevents the skin from dryness and rejuvenates the skin cells.

Purgation:
In Siddha system of Medicine Purgation was given every four months to remove the toxic elements from the body and to balance the Vaatha Dathu.

Internal Medicine:
Depends upon the severity of the Acne and the Seven Udal Daathus, internal medication has to be prescribed by a Siddha Physician. Commanly using Siddha Preparations are..
1. Parangipattai Chooranam,
2. Elathi chooranam,
3. Sangu Parpam
4. Palakarai parpam,
5. Parangi rasayanam,
6. Gandaga rasayanam.

External Medicine:
Face has to be washed with cool water very frequently, few medicines used as an external application are as follows...
1. Kungiliya Vennai,
2. Sangu Parpam with Rose water,
3. Nalungu Maavu
4. Kumkumadhi leepam

Before using get a opinion from your near by Siddha Physician to get complete relief .

By

Dr.S.Senthil Karunakaran, M.D(Siddha)
Aviztham siddha Hospital
No 6, Mounasamy Mutt Street,
Ambattur O.t, Chennai - 53.
9444403023,
www.csmrsiddha.com

Saturday, November 9, 2013

சித்த மருத்துவன்: பூண்டு

சித்த மருத்துவன்: பூண்டு: பூண்டு நோய் தடுப்பதற்க்கு உதவிப் புரிகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. ரத்ததில் வெள்ளணுத்திறனின் செயல்...

செவ்வாழைப்பழம்




  • நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். 
  • எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. 
  • கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். 
  • சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும். தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.


Dr.S.Senthil Karunakaran
Aviztham Siddha Hospital
6.Mounasamy Mutt Street, 
Ambattur, Chennai 53.
(9444403023)
www.csmrsiddha.com

பூண்டு


  1. பூண்டு நோய் தடுப்பதற்க்கு உதவிப் புரிகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. ரத்ததில் வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. அளவுக்கதிமான சதையைக் கரைக்கும். தண்டுவட உறையலற்ஜிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
  2. பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது. பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயாகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும். பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூசினால் மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம். கட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பூசிக்கொள்ள வேணடும்.
  3. பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும். பூண்டை வதக்கி வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும். இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும். சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.
  4. பூண்டுரசம் கபத்தை நீக்கும். குப்பைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்துவிடும். பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாந்த ஜன்னி குறையும். பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும். பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிட்டால் கீல்வாதம் குணமாகும்.
  5. பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்-தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும். வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். பூண்டை அரைத்துக் கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில் தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது. பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும். பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தைகளின் வாந்தி மற்றும் கொட்டாவி குறையும்.
  6. வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க-குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும். வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும். பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வந்தால் சருமத்தில் ஏற்படும் நமச்சல் மற்றும் அரிப்பு மறையும்.
  7. பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும். ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை-இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட்டால் நெஞ்சுக் குத்து நீங்கும்.
  8. பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்-பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்தால் முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.
  9. பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குணமாகும். பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும். பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவினால் உடல் வலி குறையும். காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருகினால் நன்கு தூக்கம் வரும் இரத்தக் கொதிப்பு அடங்கும்.
  10. பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லை மறையும். பூண்டுச்சாற்றை TB. நோயாளிகள் பருகி வந்தால் TB குறையும்.

Dr.S.Senthil Karunakaran
Aviztham Siddha Hospital
6.Mounasamy Mutt Street, 
Ambattur, Chennai 53.
(9444403023)
www.csmrsiddha.com

Thursday, October 3, 2013

சித்த மருத்துவன்: மர்ம காய்ச்சலிருந்து மனித உயிர்களை காப்போம்- இலவச...

சித்த மருத்துவன்:
மர்ம காய்ச்சலிருந்து மனித உயிர்களை காப்போம்- இலவச...
: மர்ம காய்ச்சலிருந்து மனித உயிர்களை காப்போம்- இலவச சித்த மருத்துவ முகாம் -3-10.2013(கீழ்கட்டளை)

சித்த மருத்துவன்: வேர்க்கடலை / நிலக்கடலை

சித்த மருத்துவன்: வேர்க்கடலை / நிலக்கடலை: எண்ணெய் வித்துகளில் ஒன்றான வேர்க்கடலையை நிலக்கடலை என்று வழக்கு மொழிகளில் அழைக்கப்படும் இது பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கொண்டது....

வேர்க்கடலை / நிலக்கடலை


  • எண்ணெய் வித்துகளில் ஒன்றான வேர்க்கடலையை நிலக்கடலை என்று வழக்கு மொழிகளில் அழைக்கப்படும் இது பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கொண்டது. நிலக்கடலை அதிக ஆற்றல் தரக்கூடியது. ஏராளமான தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் உள்ளன. ஆலிக் ஆசிட் எனப்படும் கொழுப்பு அமிலம் நிலக்கடலையில் உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதயம் சார்ந்த கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் வராமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. எளிதில் ஜீரணம் ஆகும் புரதச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சிக்கும், உடற்செயல்களுக்கும் அவசியமானதாகும்.
  • பி-கோமாரிக் அமிலம் எனப்படும் நோய் எதிர்ப்பு பொருள் நிலக்கடலைப் பருப்பில் காணப்படுகிறது. இரப்பை புற்றுநோக்குக் காரணமான படிவுகள் இரப்பையில் உருவாகாமல் தடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது. நிலக்கடலைப் பருப்பில் உள்ள மற்றொரு முக்கியமான நோய் எதிர்ப்பு பொருள் ரிசவரட்ரோல். இது புற்றுநோய்களுக்கு எதிர்ப்பாற்றலை வழங்க வல்லது. மேலும் இதய பாதிப்புகள், நரம்பு வியாதிகள், நினைவிழப்பு வியாதிகள் ஆகியவை ஏற்படாமல் காக்கும். வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும். 
  • கொதிக்க வைத்து சாப்பிடும் நிலக்கடலைப் பருப்பு கூடுதல் நோய் எதிர்ப்புத் தன்மையை உடலுக்கு வழங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. வைட்டமின் E நிலக்கடலைப் பருப்பில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பருப்பில் 8 கிராம் வைட்டமின் E கிடைக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் செயல்படும். உடற்செல்களின் சவ்வு வலுப்பெற இது அவசியம். பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோபிளேவின், நியாசின், தயமின், பான்டோதெனிக் அமிலம், போலேட் ஆகியவை உள்ளன. 100 கிராம் நிலக்கட லையில் 85 சதவீதம் ஆர்.டி.ஐ. அளவில் நியாசின் உள்ளது. இது மூளை நலமாக செயல்பட அவசியமான வைட்டமின் ஆகும். தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் வேர்க் கடலைப் பருப்பில் உள்ளன.

Dr.S.Senthil Karunakaran
Aviztham Siddha Hospital
Ambattur O.T, Chennai - 53
9444403023
drkarunakaran@gmail.com



மர்ம காய்ச்சலிருந்து மனித உயிர்களை காப்போம்- இலவச சித்த மருத்துவ முகாம் -3-10.2013(கீழ்கட்டளை)

Saturday, August 31, 2013

சர்க்கரை நோயும் வெந்தயமும்


  •  வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வந்தால் உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் வராது.

  • ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வந்தால் வயிற்றுக் கோளாறுகள் மற்றும் அஜீரணம் போன்றவை ஏற்படாது.

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.



Tuesday, August 20, 2013

பெருங்காயம்


பெருங்காயத்திற்கு இந்திய சமயலில் தனி இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம் தான் அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படுவது வழக்கம். இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலையை கட்டுப்படுத்தவும், உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் , நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

பெருங்காயம் செரிமானமின்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இது அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சமையல் பொருளான பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது. சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.

பெருங்காயம் அதிக இன்சுலின் சுரக்க வைப்பதால் அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை சுத்தம் செய்து இரத்த உறைதலை தடுக்கும். இதன் உறைவெதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் இரத்தக் கொழுப்பைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால் பல் வலி நீங்கும்.

Monday, August 12, 2013

கவலை மற்றும் மனஅழுத்தத்தை நீக்கும் இஞ்சி தேனீர்









மன அழுத்தமோ அல்லது கவலையோ ஏற்பட்டால் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிட்டால் போதும் கவலை காணாமல் போய்விடும். இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவில் ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாக்கின் ருசி சம்பந்தப்பட்ட தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அலற்ஜி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது. எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின் மீது வைத்துக்கொண்டால் நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மருந்தாகும் தேனீயின் மகரந்தம்






தேனீயின் மகரந்தம் உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்தாகும். தேனீயின் மகரந்தம் பெரிய தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், B காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு.

இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது.

தேனீயின் மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி, எக்ஸிமா, பொதுவாக தோல் எரிச்சல், போன்றவற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில் பயன் படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு உதவுகிறது. நுரையீரல் திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ்துமாவை தடுக்கும். ஏனெனில் ஆஸ்துமாவை தடுப்பதற்க்கு தேவையான ஆண்டியாக்ஸிடண்ட்களை அதிக அளவு கொண்டுள்ளது. இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள், இரத்த ஓட்ட பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரி செய்து இருதய அமைப்புக்கு ஆதரவு தருகிறது. மேலும் பக்கவாதம், மாரடைப்பை தடுக்கிறது. 

இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் ஆகியவற்றை கூடுதலாக கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில் தேனீயின் மகரந்தம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது. என்சைம்கள் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது. மேலும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயல்பாட்டை தூண்டி முட்டைகளை மீளுருவாக்கும் செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது. இது ஒரு வகையிலான ஹார்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர். புரோஸ்டேட்க்கு உதவி புரிகிறது. அதாவது புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனீயின் மகரந்தம் மூலம் நிவாரணம் காணலாம். மேலும் வீக்கத்தை குறைத்து சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது.

Monday, August 5, 2013

Benefits of pomegranates


Some potential benefits of pomegranates

  • The pomegranate tree is useful in many ways and almost every part is useful in one way or other.
  • The bark of the branches and decoction of the roots which contain an alkaloid pellatrierine and tannic acid is a highly useful medicine to get rid of helminthes, the intestinal parasite worms in the human intestine. This decoction is reported to be effective also in the treatment of tuberculosis. It is also employed in the control of dysentery and diarrhea.
  • Pomegranate seeds are rich in oil, which have hormone producing effects and stimulate estrogen hormone. It is also used to prepare cosmetics and moisturizing body lotion.
  • Powder prepared from rind is used as a tooth powder and also as medicine a cosmetic industries. Rind powder is excellent source of beta-carotene, potassium, phosphorous and calcium. The powder contains 16.5% polyphenols and 5.35% mineral matter.
  • Decoction of the flowers is used to relieve oral and throat inflammation.
  • Pomegranate fruit juice makes an excellent drink which contains potassium, phosphorous and calcium as well as micronutrients like iron, manganese, zinc and copper. The juice stimulates appetite and is used in treatment of stomach disorders. It is a good painkiller. The fruit juice is beneficial for dry coughs, provides relief in urinary disorders and can be used to wash wounds and ulcers. It is well known as an excellent treatment for anemia.
  • Pomegranate fruit has a high content of riboflavin, the B2 vitamin that normalizes the nervous system and is used against radiation sickness.

Medicinal properties:

Pomegranate is a poly-vitamin, a unique fruit plant producing a wide spectrum of biologically active substances espescially important in our present-day polluted environment. It helps in preventing the harmful effects of radioactive substances by producing biologically active substances. Russians, after the deadly Chernobyl tragedy, used pomegranates to reduce the effect of radioactive substances. In order to maintain the health and energy levels of astronomers, submariners and coal miners, they often consume pomegranate juice regularly.
Pomegranate is loaded with tannins, anthocyanins, polyphenolics and antioxidant vitamins, A, E and C, all of which have a health effect on the body. These elements work together to benefit the arteries, plus it keeps the cardiovascular system healthy which is the chief health benefit of Pomogranate. It has also been found to increase levels of nitric oxide, which improve blood flow to the heart, reduce arterial plaque, reduce systolic blood pressure and help in curing erectile dysfunction.
Other benefits include preventing premature aging, stroke, arthritis, Alzheimer's and even cancer.


Medicinal uses:
Diarrhea:
The skin of the fruit is valuable in the treatment of diarrhea. About 20g of the skin and 3g of cloves or cinnamon should be boiled well in about 250ml of water. After cooling the patient should drink 30-40ml of the liquid thrice a day for few days.

Hoarseness or loss of voice:
Boil 20g of the skin and 2-3g of alum in 250ml of water. Use the liquid for gargling.

Stomachache:
Sprinkle a little salt and pepper on the fresh seeds and eat.

Hyperacidity:
The peel of the fruit should be dried and powdered and taken in doses of 5-10g, twice or thrice a day.

Poor appetite and digestive disorders:
Make regular use of the pure juice of the fruit. Also use it for simple colitis where colon is inflamed, characterized by colicky pain and constipation or diarrhea. The juice is an excellent remedy in dysentery, inflammation and ulceration of the lower part of the colon, characterized by pain and diarrhea with bloody stools and mucus.

Nausea and morning sickness:
For nausea and morning sickness characterized by excessive secretion of bile, a tablespoon of the fresh juice mixed with an equal quantity of honey is an effective remedy.

Intestinal worms:
The bark of the pomegranate tree is highly toxic to intestinal worms. Boil the bark of a 2-inch long root bit in a cup of water and drink it three times a day to relieve the parasites.


Fever:
Mix a pinch of saffron powder to a glass of juice. The beverage is very useful in fevers and it keeps away thirst felt during fever.

Skin irritation caused by intestinal worms:
Anal itching is a key symptom indicating the presence of intestinal worms.  It is often caused by parasites in the intestines that go to the anal area to lay their eggs causing local itching. Roast the skin of the pomegranate until it is dark brown and brittle. Crush the powder to a fine texture. Mix with a little edible oil and apply over the anus.

Teeth and gum disorder:
Regular use of toothpowder of the rind helps in prevention and curing tooth decay and gum disease. It cleans the teeth, leaving them sparkling white. To make the powder, dry the rind in the sun until it is brittle and grind it. Mix the powder with a little fine black pepper and store in a jar. Use it everyday with a toothbrush or apply and rub with the finger. 

Bleeding piles:
Take about 10g of the skin of the sour variety of the fruit and boil in about 250ml of water. Sweeten with sugar and drink in the morning and evening hours.

Fenugreek

Fenugreek


Common Names: 

fenugreek,
fenugreek seed


Latin Name: 

Trigonella foenum-graecum

Fenugreek belongs to the family of legumes. The yellow to amber coloured fenugreek seeds are extensively used in India for food and medicinal purposes.The first recorded use of fenugreek is described on an ancient Egyptian papyrus dated to 1500 B.C. Fenugreek seed is commonly used in cooking. Historically, fenugreek was used for a variety of health conditions, including menopausal symptoms and digestive problems. It was also used for inducing childbirth. Today, fenugreek is used as a folk or traditional remedy for diabetes and loss of appetite, and to stimulate milk production in breastfeeding women. It is also applied to the skin for inflammation.
The leaves of the plants are also used as spice. These seeds are mixed in various food preparations.
The dried seeds are ground and taken by mouth or used to form a paste that is applied to the skin.

What the Science Says:

  • A few small studies have found that fenugreek may help lower blood sugar levels in people with diabetes.
  •  Fenugreek is used as a milk producing food for breastfeeding mothers and it increases the milk quantity.
  •  It reduces cholesterol, triglycerides and low density lipoproteins (LDL).
  •  It reduces the blood pressure.
  •  It also has the effect of reducing the sugar in diabetic persons.
  •  It may also prevent colon and breast cancer.
  •  Very often it is used as digestive aid.
  •  It is useful to treat sinus.
  •  It reduces inflammation and also fights against infection.
  •  It is served as a sweet tea in Egypt.
  •  From my personal experience I could say that it reduces also the body heat.

Chemical Composition:


Contains simple alkaloids consisting mainly of trigonelline (up to 0.13%), choline (0.05%), gentianine, and carpaine; much of the trigonelline is degraded during roasting to nicotinic acid and other pyridines and pyrroles, which probably account for much of the flavor of roasted fenugreek.
Other constituents include (1) saponins that yield on hydrolysis 0.6–1.7% steroid sapogenins consisting mainly of diosgenin and its isomer yamogenin usually in a 3:2 ratio, with tigogenin and neotigogenin also present; treatment of the seeds with enzymes before acid hydrolysis has increased the yield of diosgenin and yamogenin by 10–90%; yamogenin tetrosides B and C have been reported to be two of the glycosides (saponins) present. (2) Flavonoids, including vitexin, vitexin-7-glucoside, orientin arabinoside, homoorientin, saponaretin (isovitexin), vicenin-1, vicenin-2, quercetin, luteolin, and vitexin cinnamate. (3) Fixed oils (5–8%), which on extraction with fat solvents yield an extract with a strong odor; varying from fishy to nutty, depending on age of the extract. (4) Considerable amount of a mucilage, which appears to be mostly a galactomannan and is probably responsible for swelling of the seed in water. (5) Protein (23–25%), which is low in S-amino acids but high in lysine and tryptophan; it has been suggested as a supplement of cereal proteins. (6) Free amino acids, including (2S,3R,4R)-4-hydroxyisoleucine, histidine, lysine, and arginine, with the first one isolated at 0.09% yield as the major component. (7) Vitamins, especially A, B1, and C. (8) Minerals (especially calcium and iron). (9) Volatile components (more than 50), which include n-alkanes, sesquiterpenes, and oxygenated compounds (undecane to hexadecane, elemenes, muurolenes, γ-nonalactone, 5-methyl-δ-caprolactone, etc.); and others. 

Tuesday, July 30, 2013

உடல் பருமன் குறைய


  • அன்னாசி பழத்தில் விட்டமின் B அதிக அளவில் உள்ளது. நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்குவது மட்டுமல்லாமல் உடல் எடையும் குறையும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்தால் முக அழகு பொலிவு பெருகும்.
  • இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.
  • ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டு வ‌ந்தால்‌ உட‌ல் எடை குறையும். தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்தால் உடலில் எடை குறையும். பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு குறையும். காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

அருகம்புல்


  • அருகம்புல் சாதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் தாராலமாக கிடைக்கும், அவற்றினால் பல பயன்கள் உண்டு.
  • நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும். நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும். பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை குணமாகும். உடலுக்கு அழகும், வசீகரமும் தரும்.
  • தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள். அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி, இடித்து, கஷாயம் செய்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து, காபி போல சாப்பிட, மார்பு வலி நீங்கும், உடல் இளைக்க உதவும், உறக்கம் தரும். பல் மற்றும் ஈறு நோய்கள் நீங்கும், வயிற்று புண், கர்ப்பப்பை கோளாறுகள் போன்றவை குணமாகும்.
  • அருகம்புல்லையும், ஆல இலையையும் சமமாக எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். தூதுவளை வேரையும் அருகம்புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும் வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுகள் மட்டுமே பிழிந்து விட்டால் வலி உடனே நீங்கும்.


முருங்கை

பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும். எளிதில் உடையும் தன்மை கொண்டது. இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று கூறுவார்கள். இது இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டது. 

முருங்கை இலையால் மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும்.இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். 

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும். 

நாக்கில் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்தத்தின் செயல்பாடு சீராக இருக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும். அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். 

முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப்படுத்தி இரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும். வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும், முடி நீண்டுவளரும், நரை முடி அகலும், தோல் வியாதிகள் நீங்கும். மொத்தத்தில் முருங்கை காய் முழுமையான சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் (SPERM) பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். முடி நீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் நல்ல மருந்து. 

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. 

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

சுண்டைக்காய்

சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய் கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி, சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

Sesbania grandiflora

  • Sesbania grandiflora (also known as agati) or hummingbird tree/scarlet wisteria is a small tree in the genus Sesbania.
  • Generally the green leaves of this variety is used for cooking similar to spinach but the flower, leaf and the bark of Sesbania  Grandiflora tree has got a number of medicinal properties which is used in Siddha and other traditional medicines.
  • The simplest manner in which these leaves are used is by boiling the leaves with water to make a tea, which bears antibiotic, anthelmintic and anti tumoural properties.
  • For all sorts of sprains and bruises, sesbania grandiflora’s crushed leaves can be applied and the juice in this juice acts as a good medical treatment.
  • For women’s health issues such as white discharge or vaginal discharge accompanied with odour, these leaves are proven to be a great cure option. Sesbania grandiflora’s leaves can be added to milk and then the milk can be boiled. After this yoghurt has to be prepared out of this boiled milk (with the added leaves in it). The yoghurt after preparation has to be thinned by beating it.
  • The resulting thinned buttermilk has to be taken twice a day by women who suffer from the above stated problems. They can certainly experience a significant relief very soon.
  • The bark of this tree is boiled with water and the content is filtered to get a decoction, which can be consumed for treating diabetes and fever. This liquid is also used as a medicine to treat diarrhea, dysentery and gastric troubles.
  • Sesbania Grandiflora‘s flowers have a special ability to improve vision. The juice of the flower is squeezed into eyes to eliminate dullness in vision. The leaves also have medical benefits to treat night blindness.
  • Similarly, the roots are used as medical component in curing malaria.
  • Juice or extract made out of the roots are applied for rheumatism, itching and swelling problems. When this is consumed internally, system disorders are cured.
  • For phlegm or cough the root resin mixed with honey and one teaspoonful of this mixture is taken.
  • For digestive system and respiratory system this plant is a very effective medicine that keeps the required proportions balanced in the body.
  • All parts of this unique plant are useful. This fact has been acknowledged in thorough studies. It is also used as an antidote for poisons.
  • The flowers are so very useful in curing sinusitis and nose blocks and that is why they are used in almost all Siddha medicines for cold and fever.
  • The plant has various uses in folk and traditional medicines for headache, swellings, anemia, bronchitis, pains and tumors.                 
  •                                                                                     Dr.Senthil Karunakaran, M.D(Siddha)
  •                                                                                     Ambattur, Chennai