Tuesday, July 30, 2013

முருங்கை

பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும். எளிதில் உடையும் தன்மை கொண்டது. இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று கூறுவார்கள். இது இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டது. 

முருங்கை இலையால் மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும்.இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். 

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும். 

நாக்கில் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்தத்தின் செயல்பாடு சீராக இருக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும். அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். 

முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப்படுத்தி இரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும். வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும், முடி நீண்டுவளரும், நரை முடி அகலும், தோல் வியாதிகள் நீங்கும். மொத்தத்தில் முருங்கை காய் முழுமையான சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் (SPERM) பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். முடி நீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் நல்ல மருந்து. 

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. 

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

1 comment:

  1. இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது முருங்கை காய் மருத்துவ குணம் .

    ReplyDelete