Tuesday, July 30, 2013

அருகம்புல்


  • அருகம்புல் சாதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் தாராலமாக கிடைக்கும், அவற்றினால் பல பயன்கள் உண்டு.
  • நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும். நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும். பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை குணமாகும். உடலுக்கு அழகும், வசீகரமும் தரும்.
  • தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள். அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி, இடித்து, கஷாயம் செய்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து, காபி போல சாப்பிட, மார்பு வலி நீங்கும், உடல் இளைக்க உதவும், உறக்கம் தரும். பல் மற்றும் ஈறு நோய்கள் நீங்கும், வயிற்று புண், கர்ப்பப்பை கோளாறுகள் போன்றவை குணமாகும்.
  • அருகம்புல்லையும், ஆல இலையையும் சமமாக எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். தூதுவளை வேரையும் அருகம்புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும் வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுகள் மட்டுமே பிழிந்து விட்டால் வலி உடனே நீங்கும்.


No comments:

Post a Comment