Saturday, November 18, 2017

பச்சை மிளகாயை ஒதுக்காதீர்கள்! ஆய்வில் ஓர் தகவல்!

பச்சை மிளகாயை ஒதுக்காதீர்கள்! ஆய்வில் ஓர் தகவல்!

Image result for green chili images

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பச்சை மிளகாயில் பெருமளவு நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.

      பச்சை மிளகாய் காய்ந்து சிவந்து வத்தலாக மாறிவிட்டால் இந்த மருத்துவக் குணங்களும் காணாமல் போய்விடுகிறதாம். அதனால் பச்சை மிளகாயே உணவுக்கும் உடலுக்கும் நல்லது என்கின்றனர். பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மிக அதிக அளவில் இருப்பதால் நமது உடலுக்கு பாதுகாவலன் போன்று உதவுகிறது. இயங்கக் கூடிய உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றது. மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்தும் காப்பாற்றுகிறது. இளமையை நீடிக்கவைக்கும் வல்லமையும் இந்த பச்சை மிளகாய்க்கு உண்டு என்று கூறுகின்றனர் ஆராட்சியாளர்கள்.
               
இதில் விட்டமின்சிஅதிக அளவில் உள்ளதால் மிளகாயை பயன்படுத்தும் போது மூக்கடைப்பு குணமாவதை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம்.
அதே போன்று விட்டமின்  ‘யும் அதிக அளவில் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாக்கவும் எண்ணெய் சுரப்புக்கும் உதவுகிறது. இப்படி பச்சை மிளகாயால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் எந்தவித கலோரிகளும் இல்லாமல் கிடைக்கிறது. அதனால் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்களும் தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
               
ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பதால் அவர்கள் பச்சை மிளகாயை உண்பதன் மூலம் அந்த பாதிப்பிலிருந்து விலகலாம் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
               
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உணவு செரிமானம் வேகமாக நடைபெறுகிறது. நாம் சாப்பிடும்போது நம் கையில் கிடைக்கும் பச்சை மிளகாய்த் துண்டுகளை கறிவேப்பிலை போல் ஒதுக்கி விடாமல் சாப்பிட்டாலே போதும். கறிவேப்பிலையும் அப்படித்தான். அதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அதை ஒதுக்காமல் உணவோடு சேர்த்து சாப்பிடுவது மிக மிக நல்லது.

நன்றி - சித்தன்குரல் மாத இதழ் 
                நவம்பர் - 2017

சந்தா விபரம் .. 9444403023