Monday, May 1, 2023

உலக மலேரியா நாள் - 25 ஏப்ரல் (World Malaria Day – 25th April , WMD)

 

உலக மலேரியா நாள் -  25 ஏப்ரல்

(World Malaria Day – 25th April , WMD)

 

ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

 மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.

 ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர்.  உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.

 வழக்கமாக நோய்க்காவியான பெண் அனாஃபிலிஸ் (Female Anopheles) கொசு அல்லது நுளம்பு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.

 மலேரியாவின் அறிகுறிகளாவன:

காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், வாந்தி, இரத்த சோகை , விழித்திரை சேதமடைதல்,  மற்றும் வலிப்புகள். சுழற்சி முறையில் ஏற்படும் திடீர் குளிர்மத்தைத் தொடர்ந்து குளிர்நடுக்கம் ஏற்படும். அதன் பிறகு காய்ச்சலும் வியர்வையும் 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.

 

“வருமுன் காப்போம்”

“வருமுன் காப்போம்” என்ற சித்த மருத்துவத்தின் கோட்பாட்டின்படி மலேரியா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க நமது சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதார கேடு இன்றியும் வைத்திருத்தல் அவசியம்.

 நோயைப் பரப்பும் இந்த கொசுக்களை அழிப்பதும், வளர விடாமல் தடுப்பதும், கொசு கடிப்பதிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதும் முக்கிய பங்காற்றும்...

 சித்த மருத்துவம் கூறிய வழியில், நோய் எதிர்ப்பாற்றலை கூட்டும் விதமாக, காயகற்ப முறைகளையும், நாளொழுக்கம், கால ஒழுக்கங்களையும் பின்பற்றி வாழுதல் அவசியம்.

 சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், வாத சுர குடிநீர், திரிகடுகு சூரணம் ,பிரம்மானந்த பைரவம் போன்ற மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள நற்பலனை தரும்.

 தமிழர்களின் நாகரிகத்தில் கடைப்பிடித்து வந்த, சுகாதார முறைகளான கிருமி நாசினி செய்கை கொண்ட பசுஞ்சாணம் மற்றும் மஞ்சளை கலந்த நீரை தெளித்து, வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல்..

 சிறுகுறிஞ்சான், நிலவேம்பு, ஆடாதொடை, கற்பூரவள்ளி மற்றும் கற்றாழை போன்ற செடிகளை வீட்டின் தோட்டத்தில் வளர்த்தல்..

தினந்தோறும் மாலை நேரங்களில் ஆமணக்கு நெய் அல்லது எள் எண்ணெய் கொண்டு விளக்கேற்றுதல்...

வாரம் தோறும் வீட்டில் சாம்பிராணி அல்லது காய்ந்த நொச்சி வேப்பம் இலைகளைக் கொண்டு புகையிடுதல் போன்றவை கொசுக்களை வளர விடாமல் தடுக்கும்.

 

சித்த மருத்துவ சேவையில்….

அவிழ்த்தம் சித்த மருத்துவமனை,
அம்பத்தூர், சென்னை-53
9444403023