சித்த மருத்துவப் படிப்பு: 13-ம் தேதி முதல் கலந்தாய்வு
First Published : 07 Oct 2011 01:49:30 AM IST
சென்னை, அக். 6: சித்த மருத்துவப் பட்டப்படிப்பு உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க அக்டோபர் 13 முதல் மூன்று நாள்கள் கலந்தாய்வு நடைபெறுகிறது
2011-2012 ஆம் கல்வியாண்டில் சித்த மருத்துவப் பட்டப் படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி மருத்துவப் பட்டப்படிப்பு (பி.யு.எம்.எஸ்.), இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பு (பி.என்.ஓய்.எஸ்.), ஹோமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பு (பி.எச்.எம்.எஸ்.) ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க சென்னை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும்.
இந்திய முறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதி இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 50 பி.ஏ.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சி.சி.ஐ.எம்.) இதுவரை அனுமதி அளிக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் தனியாக கலந்தாய்வு நடத்தப்படும்.
தகுதியான மாணவர்களுக்கு தனித்தனியே கலந்தாய்வு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் கிடைக்காத தகுதியான மாணவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி அவரவர்க்குரிய தரவரிசையின்படி கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு விவரம்: அக்டோபர் 13 (வியாழன்)-காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை -அனைத்து சிறப்புப் பிரிவு மற்றும் பொதுப் பிரிவு-தர வரிசை எண் 1 முதல் 51 வரை-கட் ஆஃப் மதிப்பெண் 197.00 முதல் 187.50 வரை; பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை-தர வரிசை எண் 52 முதல் 202 வரை - கட் ஆஃப் மதிப்பெண் 187.25 முதல் 175.25 வரை.
அக்டோபர் 14 (வெள்ளி)- தர வரிசை எண் 203 முதல் 355 வரை- கட் ஆஃப் மதிப்பெண் 175.00 முதல் 163.50 வரை; பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை-தரவரிசை எண் 356 முதல் 502 வரை- கட் ஆஃப் மதிப்பெண் 163.25 முதல் 154.25 வரை;
அக்டாபர் 15 (சனிக்கிழமை)-தர வரிசை எண் 503 முதல் 677 வரை -கட் ஆஃப் மதிப்பெண் 154.00 முதல் 143.25 வரை; பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை-தர வரிசை எண் 678 முதல் 861 வரை; கட் ஆஃப் மதிப்பெண் 143.00 முதல் 130.00 வரை. மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுக் குழுச் செயலர் தெரிவித்துள்ளார்.